வியாழன், 2 ஜூலை, 2009

எவ்வாறு தடைசெய்யப்பட்ட ‘YouTube Shows’ வீடியோக்களைப் பார்ப்பது?

யூடியூப் YouTube Showsசை ஆரம்பித்தப்போது, சந்தோஷத்தில் வானில் பறந்தேன், கற்பனை வெள்ளத்தில் மிதந்தேன்.விரைவில் நான் அறிந்துகொண்டேன், இந்த YouTube Shows இலங்கைப் பயனர்களுக்கு கிடையாது. பல முக்கியமான தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அமெரிக்க நண்பர்களுக்கே பார்க்கலாமாம்.
நான் ரொம்பவும் எரிச்சல் பட்டேன். எதுக்கு இந்த யூடியூப் காரணுகள் பார்க்க முடியாத வீடியோக்களை எங்களுக்கு இருகென்டு காட்டிக் கடுப்பேத்துறானோ தெரியாது.வீடியோவில் சொடுக்கினால், பின்வரும் பிழைச்செய்தி வரும் “This video is not available in your country due to copyright restrictions”.
என்ன நடக்குதெண்டு கூகிளிட்ட கேட்டா அவரிண்ட பதில் இதுதான்….
Some YouTube content partners choose to make their videos available only to certain countries. For instance, they may only have the licensing rights for a particular region. On occasion, YouTube does block specific content in order to comply with local laws in countries where YouTube has been launched. For instance, certain Nazi imagery is unlawful in parts of Europe.
எங்களின் ஜபி முகவரியை வைத்தே வீடியோக்களை எங்களுக்கு காட்டாமல் மறைக்கின்றார்கள். எங்கள் ஐபி முகவரி நாங்கள் இலங்கையில் இருந்து வருகின்றோம் என்பதைக் காட்டிகொடுத்துவிட கூகிளார் மேல் உள்ள பிழைச செய்தியைக் காட்டுவார்.
பல ஐரோப்பிய பயனர்களுக்கும் இதே நிலமைதான். நான் இணையத்தில் தோண்டியதில் பின்வரும் புரோக்சி கண்ணில் பட்டது.
http://www.hypercloak.com உங்களுக்கு யூடியூப்பில் உள்ள பல நிகழ்ச்சிகளைக் காண உதவும்.அவர்களின் தளமூடாகச் சென்று YouTube showsவைக் கண்டு கழியுங்கள்.

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...