செவ்வாய், 16 நவம்பர், 2010

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் 'modern messaging system

பல நாள் கேள்விக்கு விடை கிடைத்திவிட்டது. ஃபேஸ்புக் இணைய தளம் புதிதாக அறிவித்திருக்கும் சேவையினை “modern messaging system” என அழைக்கிறது. இது மின்னஞ்ஞல் அல்ல. மின்னஞ்ஞல் எனும் வரைவிலக்கணத்துக்கு அப்பால் பட்டது. மின்னஞ்ஞல் சேவையும் இதில் உள்ளடங்கும்.
ஃபேஸ்புக் இணைய தளம் ஒரு புதிய மின்னஞ்ஞல் சேவையினை அறிமுகப்படுத்தப் போகிறது என உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் , அது மின்னஞ்ஞல் அல்ல அதைவிட ஒரு படி மேலான தொடர்பாடல் முறையொன்று என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த “modern messaging system” மூன்று வகையான எண்ணக்கருக்களை கொண்டுள்ளது.
01. seamless messaging
02. cross-platform conversation history
03. the social inbox.
நீங்கள் விரும்பும் சமயத்தில் உங்களுக்கு @facebook.com எனும் மின்னஞ்ஞல் முகவரி உங்களுக்கு தரப்படும். இங்கு சம்பிரதாயமான மின்னஞ்ஞல் முறை காணப்படாது. யாருடன் வேண்டுமானாலும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மெசேஜின் முறைமை அமைய இருக்கிறது. மேலும் எமக்கு வரும் தகவல் அனுப்பப்படும் நபரினை பொறுத்து ஒரு சிறப்பான வகைப்படுத்தலும் இங்கு இடம்பெற இருக்கிறது.
சுருக்கமா சொன்னா, ஒரு கூலான தொடர்பாடல் முறையாக இந்தப் புதிய Messaging system அமையவிருக்கின்றது. இந்தப் புதிய சேவையானது இன்னும் சில மாதங்களில் பாவனைக்கு வர காத்திருக்கிறது. பரீட்சாத்தமாக கேட்பவர்க்கு மட்டுமே ஃபேஸ்புக் இந்த புதிய சேவையை தர இருக்கிறது. அதாவது இன்விடேசன் முறைமை.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ரோஜாவும் அர்த்தமும்


இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,
இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.
 ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்......,
*சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.
*இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.
* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.
* அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.
* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.
* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.
* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.
* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.
* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.
* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.
* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.
* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.
* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.
* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.
* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!

வெள்ளி, 12 நவம்பர், 2010

எந்திரன் வீடியோ songs hq telugu






















டவுன்லோட் செய்ய.
http://www.ziddu.com/download/12264099/VTS_05_1-muxed.avi.html

http://www.ziddu.com/download/12264098/VTS_04_1-muxed.avi.html

http://www.ziddu.com/download/12263075/VTS_02_1-muxed.avi.html

http://www.ziddu.com/download/12263074/VTS_01_1-muxed.avi.html

http://www.ziddu.com/download/12263073/VTS_03_1-muxed.avi.html

http://www.ziddu.com/download/12262197/ChittiDanceShowcase.avi.html

http://www.ziddu.com/download/12262196/PuthiyaManidha.avi.html

யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல், அவர்கள் முன்பே நடமாட முடிந்தால், அவ்ர்களை கண்காணிக்க முடிந்தால், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.

எதிரிகளை உளவு பார்க்கவும் முடியும்… நமக்கு பிடித்தவர்களை, அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல், அருகில் இருந்து ரசிக்கவும் முடியும்..

கதைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த பண்பை அறிவியல் நடைமுறையில் சாத்தியமாக்க இருக்கிறது..



ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டால் யார் கண்ணிலும் பட மாட்டீர்கள்.. கடன் கொடுத்தவர்கள் கண்ணில் பட மாட்டீர்கள் என்பது மட்டும் அனுகூலம் அல்ல..



நாம் காதலிக்கும் பெண்ணை அவள் வீட்ற்கு சென்று பேசி விட்டு யார் கண்ணிலும் படமால் திரும்பி வந்து விடலாம் என்ற அனுகூலமும் இருக்கிறது..



மேலும் சில சீரியஸ் அனுகூலங்களும் இருக்கின்றன…



இப்படிப்பட்ட ஆடைக்கு தேவையான துணிக்கான ஆதார பொருளை கண்டு பிடித்துள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அறிவியல்ரீதியாக இது எப்படி சாத்தியமாகும் ?



இதை புரிந்து கொள்ள , ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும்.



ஒளி அதாவது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே, தமன்னாவை சிவப்பாகவும், கிளியை பச்சையாகவும் பார்க்கிறோம்..



ஏழு வண்ணங்கள் சேர்ந்தது தான் எல்லா நிறமும் உண்டாகிறது.. 400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை அலை நீளம் கொண்ட வண்ணங்களையே நம் கண்களால் பார்க்க முடியும்..



வயலட் நிறம் குறைவான அலை நீளம் கொண்டது… சிவப்பு அதிக அலை நீளம் கொண்டது… மற்ற நிறங்கள் இதற்கு இடப்ப்பட்டவை..



ஒரு பொருள் எல்லா நிறத்தையும் விழுங்கிவிட்டு, சிவப்பை மட்டும் பிரத்திபலித்தால், அந்த பொருள் சிவப்பாக இருக்கிறது என்கிறோம்… அதாவது ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எப்படி பிரதிபலிக்கிறது என்பதே அந்த பொருளின் நிறம்..



சரி, ஒளி இப்படி ஒரு பொருளின் மீது பட்டு பிரத்திபலிக்காமல், அதை சுற்றி சென்று விட்டால் என்ன ஆகும் ? அதாவது தன் ஓடு பாதையில் இருக்கும் கல்லின் மீது மோதி திரும்பாமால்,. அந்த கல்லை சுற்றி ஓடும் நீர் போல..



நடைமுறையில் அப்படி ஒளி செல்லாது… கண்ணாடி போன்ற பொருட்களை ஒளி ஊடுருவி செல்லும்.. மற்ற எல்லா பொருட்களும் ஒளியை கவர்ந்து விடும்… கொஞ்சம் பிரதிபலிக்கும்….



ஒளியை விலக செல்லும் பொருட்கள்தான் இந்த ஆராய்ச்சியின் இலக்கு…



இது போன்ற பொருட்களை முன்பே கூட சிலர் உருவாக்கி இருக்கின்றனர்,.,,,



ஆனால் அந்த பொருட்கள் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே பயன்படும்… அவற்றை நம் விருப்பதிற்கேற்ப வளைக்கவோ, மாற்ற்வோ முடியாது…

நெகிழ்வு தன்மை கொண்ட பொருளை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.



Andrea di Falco of the University of St. Andrews ஆண்ட்ரியா டி ஃபால்கோ தலைமையில் செயிண்ட் ஆண்ட்ரிவ்ஸ் பல்கலையில் இந்த பொருளை உருவாக்கி இருக்கின்றனர்..



சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் பாலிமர் மற்றும் சிலிக்கானை பயன்படுத்தி இதை தயாரித்துள்ள்னர்..



இதை பயன்படுத்தி செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்பார்த்த ரிசல்ட்டை தந்தது..



இந்த பொருளை பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணாடியை அணிந்தால், நாம் கண்ணாடி அணிந்து இருப்பது வெளியே தெரியாது.



நாம் ஆடை அணிவது மற்றவர்கள் கண்களுக்கு சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் மற்றவர் கண்களுக்கு தெரிய அவசியமில்லாத ஆடைகளும் உண்டு… இந்த பயன்பாட்டுக்கும், இந்த தொழில் நுட்பம் பயன்படும்.



இந்த பொருளை பயன்படுத்தி நாம் முழுதுமே கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடலாம்… யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகிய பெண்களை சைட் அடிக்கலாம் என்பதும், அவர்கள் பின் சுற்றலாம் எனபதும் உண்மைதான்.

திங்கள், 8 நவம்பர், 2010

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?



சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.

எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.

Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்குமட்டும் பொருந்தும்.)

Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.

இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...