ஞாயிறு, 31 மே, 2009

facebook & ஈஸ்டர் egg

கணணி மென்பொருள் வல்லுனர்கள் சின்னக் குறும்புத்தனம் மிக்கவர்கள் என்று முன்னர் கேள்விப்பட்டு இருக்கின்றேன். தாங்கள் வடிவமைக்கும் மென்பொருளில் சின்னச் சின்னக் குறும்புகளினைச் செய்து அது தெரியாமல் மறைத்து ஒரு மறைபொருளாக உருவாக்கிவிடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறான மறைக்கப்பட்ட சில செய்திகள் பின்நாட்களில் வெளிக் கொணரப்படும் போது அவை அம் மென்பொருளினைப் பாவிப்பவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுவது உண்டு. அத்ததைய மறைக்கப்பட்ட செய்திகள் Easter Egg எனக் குறிப்பிடுவதுண்டு.

முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமூக வலையமைப்பு. அத்தகைய மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ள கணணி மென்பொருள் கலைஞர்கள் பல Easter Egg களினை முகப்புத்தகத்தில் உருவாக்கியுள்ளார்கள். இங்கே அவற்றில் சிலவற்றைத் - நான் அறிந்தவற்றை - தருகின்றேன். நீங்கள் கொஞ்சம் செய்து பாருங்களேன்.

1. Click on Fackbook background.
Now press the following keys 'UP', 'UP', 'DOWN', 'DOWN', 'LEFT', 'RIGHT', 'LEFT', 'RIGHT', 'B', 'A', 'ENTER'.

இப்போது மீண்டும் Fackbook background இல் click செய்யுங்கள். இப்போது பாருங்களேன்...







2. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அரட்டை(CHAT)யில் ஈடுபடும் போது பின்வரும் சொல்லினை பதிந்து பாருங்கள். : putnam:. [ No space in between ':' and 'p'. I have to put a space character in between ':' and 'p'. ] என்ன முயற்சித்துப் பார்த்தீர்களா...

வெள்ளி, 29 மே, 2009

சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்

சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்...
கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம் இது. தனது மரணத்திற்கு பின்னரே இந்த கடிதம் கியூப மக்கள் மத்தியில் வாசிக்கப்பட வேண்டும் என்பதே சேயின் விருப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சேயும், பிடெலும் பிரிந்துவிட்டார்கள் எனவும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் பல்வேறுபட்ட வதந்திகளை அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான ஏகாதிபத்திய நாடுகள் உலவவிட்டதன் காரணமாக, சே கொங்கோவில் இருந்த சந்தர்ப்பத்தில், கியூப மக்கள் மத்தியில் பிடெல் இந்த கடிதத்தை வாசித்தார்.
பிடெல்,
இந்த நேரத்தில் எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது. புறப்படத் தயாரான போது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது.பிறகு எல்லாம் புரிந்தது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.
இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகின்றேன்.
கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புக்களிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகின்றேன்.கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.
புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கின்ற அர்ப்பணிப்போடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியாரா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரடம்சிகரத் தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கின்றேன். கரீபிய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சந்தர்ப்பத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமும் இன்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகின்றேன்.
என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.
மகிழ்ச்சியோடும், வருத்தங்களோடும் தான் நான் இதனை செய்கின்றேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தைக் கட்டி எழுப்புவார்கள் என்கின்ற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கின்றேன்.தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகின்றது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கின்றேன். மக்களின் புரட்சிக்கரத் தன்மைகளைப் பெற்று செல்கின்றேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகின்ற உணர்வை ஏந்திச் செல்கின்றேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆழமான காயங்களைச் சரிசெய்கின்றது.
கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறொரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாகய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கின்றேன். அப்படியே நடந்து கொள்வேன்.என்னுடைய மனைவிக்கும், குழந்தைக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சிதான். வாழ்வதற்கு தேவையானவற்றையும் கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கின்றது.
உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கின்றேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.எனது முழுமையான புரட்சிகர உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத்தழுவிக் கொள்கின்றேன்.
சே.

வியாழன், 28 மே, 2009

wall poto
















சில நல்ல புகைப்படங்கள்



















































































































































































































எங்கே புத்தன்?...

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்."மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

புதன், 27 மே, 2009

video














நகைச்சுவை

டாடி
மகளே.. சின்ன வயசுல என்னை நீ வாய் நெறய ‘அப்பா.. அப்பானு கூப்பிடுவ. இப்போ ஏன் ‘டாடி.. டாடின்னு கூப்பிடுறே?அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி

சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்

உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.

அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.

இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.

சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.

உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள்

மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,

'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'

ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.

'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்

'வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'

டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.வயதானவர்:எனக்கு முதுகு வலி'

டாக்டர்:'வயசாயிடுச்சில்ல''என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.

டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'

ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..7 GB ஹார்ட் டிஸ்க் காலனிபுதுக்கோட்டையில் இருந்து வைரஸ்காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்கவைரஸை வேட்டையாடு விளையாடுசொல்ல மறந்த பாஸ்வேர்டுஒரு மவுஸின் கதை

செவ்வாய், 26 மே, 2009

facebook பயனுள்ள டிப்ஸ்கள்















,
நெருப்பு உலவியின் side bar இல் facebook chat இனை நிறுவிக்கொள்ள
நெருப்பு உலவியின் சைடு பாரில் facebook chat இனை நிறுவி facebook செல்லாமலேயே chat செய்ய முதலில் உங்கள் நெருப்பு உலவியில் bookmark பகுதியைத் திறந்து அதில் organize bookmark இனைத் தெரியுங்கள்.

அடுத்ததாக கீழே காட்டியுள்ளவாறு நிரல்களை நிரப்புங்கள்
§ Name: Facebook Chat
§ Location: http://www.facebook.com/presence/popout.php
அதிலுள்ள Load this bookmark in sidebar. இனை டிக் செய்யுங்கள்.

அதன்பிறகு நெருப்பு உலவியின் View பகுதிக்குச் சென்று Sidebar இனைத் தெரிந்து அதில் bookmark இனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போது facebook chat உங்கள் சைடு பாரில் தயார்!

Facebook செல்லாமலேயே உங்கள் Desktop இல் chat செய்ய

இங்கே http://www.gabtastik.com/GabtastikWin.htmlசென்று Gabtastik என்ற மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். Facebook செல்லாமலேயே நீங்கள் Chat செய்ய முடியும்.
Facebook இல் உங்கள் ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள

இந்த https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442நெருப்பு உலவியின் add-ons உங்கள் Facebook ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள உதவும்.
உங்கள் பிளாக்கின் RSS இனை Facebook இல் இணைக்க
Facebook இல் உங்கள் Profile பகுதிக்குச் சென்று அதில் What's on your mind? என்ற பெட்டிக்குக் கீளே உள்ள Settings இனை கிளிக்குங்கள்
அதில் Blog/Rss இனைத் தெரியுங்கள்.
அதில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை அமுக்குங்கள். இனி உங்கள் பிளாக்கின் இடுகைகள் தானாகவே Facebook இல் தெரியும்.

LinkWithin

திங்கள், 25 மே, 2009

நான் irasiththavai
















டார்வின் 200

பழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வயது 200.அவரது இருநூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. தான் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார். அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார். ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியா னது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார். டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ். ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை

இன்னும் சில
























































புகைப்படங்கள்







Related Posts Plugin for WordPress, Blogger...