வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் கவனிப்பாடாமல் போன படைப்புகள்


ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில திரைப்படங்களின் வர்த்தகத் தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே அடுக்குகிறேன்). அதில் "வெள்ளைப் பூக்கள்" பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் கைது செய் படத்தில் வரும் "என்னுயிர் தோழியே" பாடல். இதனை சின்மயி மிக அருமையாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் போது வரும் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மற்றுமொரு பாடல். தீக்குருவி என வரும் பாடல். அதை ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே மிக அருமை. ஏனோ, கவனிக்கப்படாமல் போய்விட்டன. மேலும், பாடல்களை எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான் பணியாற்றமாட்டார் என்றும் நினைக்கின்றேன்.

2. இருவர் படத்தில் வரும். பூக்கொடியின் புன்னகை பாடல். அதனை சந்தியா பாடியிருந்தார் . அதில் பல்லவி முடிந்ததும் வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்றே படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ளே" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமானே பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ தேஷ் அல்லது தமிழில், உந்தன் தேசத்தின் குரல் மிக மிக அருமையானப் பாடல். அவரே பாடியது.

6. "சித்திரை நிலவு சேலையில் வந்தது" - வண்டிச்சோலைச் சின்னராசு படத்தில் வரும். ஜெயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "நெஞ்சே நெஞ்சே" பாடல். "போகும் வழியெங்கும் காற்றே". இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" - இது கார்த்திக், சித்ரா(இன்னொரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது" பாடலும் நல்ல பாடல்.

10. லவ் பேர்ட்ஸ்-ல் வரும் "நாளை உலகம் இல்லை என்றால்". மிக அருமையானப் பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊனே ஊனே உருக்குறானே" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்தது.

12. "அழகே சுகமா" பாடல் - பார்த்தாலே பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும் பாடியது. (தகவலுக்கு நன்றி - ஜெயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்பே" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

இணையத்தளமூடக உங்கள் கணணியை இயக்க முடியுமா?

TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.



1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..

2.

பின்னர் http://www.Twitter.com

என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது

{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}

3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.

{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }

அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்


நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.



அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்


இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன


Ctrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.

Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.

Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.

F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.

Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.

Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.

Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.

Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.

Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.

Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.

Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.

Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.


Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்


Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்

Ctrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.

Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு

Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு

நன்றி --http://tamilhackx.blogspot.com/

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

Potable Software களை இலகுவாக pen drive இல் நிர்வகித்தல்

நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.

இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.


இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்




இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.


பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html


இனி என்ன பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

நகைச்சுவை

பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.
பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!
ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.
ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!

***

நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

ஜோ : செக்கோஸ்லேவேகியா சார்.

அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள்.

ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன்.

***

அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

***

நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே!

***

டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது.

ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.
*****


பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?

ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

***

ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே".

உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.

***

சோம்பேறித்தனம் தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி - நேருஜி

நம்முடைய எதிரியையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் - காந்திஜி

ஜோன்ஸ் : அப்படின்னா சோம்பேறித்தனத்தை நேசிக்கணுமா?

*******
ஜோ : நான் செத்துட்டேன்னா எனக்குப் பிறகு நீ விக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
மனைவி : அவர் உங்க பரம எதிரியாச்சே!!!
ஜோ : பின்ன..நான் எப்படித்தான் அவனப் பழிவாங்கறது.

****

கிருஷ்ண அவதாரத்தில் ஒரு சந்தேகம்"

ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

நகைச்சுவை துணுக்குகள்

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

****

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?

மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.

ஆசிரியர் : எப்படிச் சொல்ற?

மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்

|*****

இரண்டு மாணவர்கள் தீவிர விவாதத்தில் இருந்தனர். அவர்களை நெருங்கிய ஆசிரியர் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, அவர்கள் கீழே கிடந்தது என நூறு ரூபாயைக் காட்டிவிட்டு, 'யார் மிகப்பெரும் பொய்யைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு இந்த நூறு ரூபாயைக் கொடுப்பதாக இருக்கிறோம்' எனக் கூறினர். கோபமடைந்த ஆசிரியர், இந்த வயதிலேயே பொய்யா... நான் உங்கள் வயதில் இருக்கும்போது பொய் என்றால் என்னவென்றே தெரியாது. அது தெரியுமா உங்களூக்கு?

மாணவர்கள் இருவரும் ஆசிரியரிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு அமைதியாகச் சென்றனர்.

****

புதன், 5 ஆகஸ்ட், 2009

இது எப்படி இருக்கு

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள்.

ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.

படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.




படம் 2 : ஓரமாய் ஒரு சிறு தொடுதல்.





படம் 3 : பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! வாவ் !.



படம் 4 : கடைசியில் அவ்ளோ தான் !!!!

புலி என்றா சும்மாவா?

இங்க இருக்கிற புலியோட போட்டோவ ஏலுமென்றால் டவுண்லோட் செய்து பாருங்க...

இணையத்தில் இருகும் உங்களது போட்டோவை யாரும் டவுண்லோட் செய்யாமல் இருக்க இந்த வழிய பயன்பபடுத்தி பாருங்கலேன்..
இந்த லிங் ல தனுங்க நானும் பார்த்தன்


http://www.eobcards.com





border=0>

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

இன்றைய..பல குழந்தைகள்..இளைஞர்கள் மத்தியில்..தீரா பிரச்னையையாக இருப்பது Obesity என்னும் உடல் பருமன் தான்.

உடல் பருமன் சர்க்கரை நோய்,இதய நோய்,ரத்த அழுத்தம்,பக்கவாதம் ஆகிய நோய்களுக்கு ஒரு காரணமாய் அமைந்துவிடுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி..இருபது சதவிகிதம் குழந்தைகளும்,60 சதவிகிதம் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக உடல் பருனாய் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்..நமது உணவில் ஏற்பட்டுவரும் மாற்றம்தான் என தெரிய வந்துள்ளது.இட்லி,தோசை,பொங்கல்..ஆகியவை..இந்திய குடும்பங்களிலிருந்து..கொஞ்சம்..கொஞ்சமாய் மறைந்துஅவற்றின் இடத்தை..நூடில்ஸ்,பிஸ்ஸா,பர்கர் ஆகியவை பிடித்து வருகின்றன.

மேலும்..பணம்,புகழ்,ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு..பலர்..தங்கள் உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஒழுங்கான உடற்பயிற்சி,நடை ஆகியவை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல் பட வேண்டும்.

BMI எனப்படும் body mass index ஐ நினைவில் கொள்ளுங்கள்..அதாவது..நமது எடையை கிலோகிராமில் எடுத்துக் கொண்டு..அதை நம் உயரத்தால்..உயரத்தை மீட்டர் ஸ்கொயரால்(M2) வகுக்கு வேண்டும்.

25 க்குள் ஈவு இருந்தால்..சரியான எடை
25 முதல் 30 வயதுவரை எடை அதிகம்
30க்கு மேல் Obesity

ஆரோக்ய உணவை அருந்தி..சரியான உடற்பயிற்சி செய்து..நோயை நம்மை அண்டவிடாமல் தடுப்போம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...
Related Posts Plugin for WordPress, Blogger...