காதல் கவிதைகள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
முத்தம்
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
காதல் கவிதை
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது
மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு
தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!
மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
உனைப் போலவே பிடிபடாமல் பறக்கின்றன.
எனை நான் மறந்து காலங்கள் பல
உனை நினைக்க மறந்தும் தான்...
உன்னிடம் காதல் சொல்வதற்காய்
ஒத்திகை பார்க்க நினைக்கின்றேன்
கிடைக்க வில்லை தனிமை
என்றும் என் மனதில் நீங்காமல் நீ...
இன்னல் மத்தியில் தமிழன்
மறந்தும் விட்டான் இறைவன்
உன் கண்களை படைத்த பின்
எமை மறந்ததில் குற்றம் இல்லை தான்...
என்னை விட உன்னை யாராலும்
இவ்வளவு ரசிக்க முடியாது காரணம்
யாருக்குமே நீ இவ்வளவு
அழகாக தோன்றப் போவதில்லை
இறைவன் மீது ஆற்றாக் கோபம் எனக்கு
கண்களுக்கு இமைக்க கற்றுக் கொடுத்தது அவன் தானே!!!
இமைக்கும் நேரத்தில்
மறைகிறாயே நீ...........
காதலியிடம் காதலை சொல்லா
அனைவருமே ஞானி தான்
அவர்களுக்கு தான் மரணம் ஒரு பொருட்டல்லவே
தினம் தினம் இறப்பவர்கள் தானே அவர்கள்....
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
புதிதாய் தெரிகிறாய்..
சிரிக்கும் போது நெஞ்சை
சிதைத்து விடுகிறாய்..
பார்த்துப் பார்த்தே
பாதி உயிரை வாங்கி விட்டாய்..
நீ சாதாரணமாக கூறும் வார்த்தைகளுக்கு கூட
புதிய அர்த்தம் கற்பித்து மகிழ்கிறேன்..
அன்பே! தயவு செய்து கேட்கின்றேன்..
என்னை காதலிக்கின்றேன் என மட்டும் கூறி விடாதே,,,
இந்த வலி சுகமாக தான் இருக்கிறது,,,
உனக்கும் இதே வலி இருக்கும் என்ற ஒரே நம்பிக்கையில்.........
ஈழம் என்பது
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைத்தான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாராலும் கலைக்க முடியாது
இது தானா புரட்சி?
நண்பா!
உன்னை முதல் முதலாய்
பார்த்த போது
உனக்குள்
புரட்சி
ஒன்று இருப்பதைக் கண்டு
நான் என்னை மறந்து
பரவசம் அடைந்தேன்.
புரட்சி என்னும் வார்த்தைக்கு
பொருள் தேடி
அகராதியை புரட்டினேன்.
அதில் உன் முகம் தெரிய
அகராதி புரட்டுவதை
நிறுத்தி விட்டேன்
நண்பா!
திருமணத்திற்கு
தாலி ஒரு
அவமான
சின்னமாகச் சொன்னாயே?
இன்று
உன் காதலியைக் கண்டவுடன்
தாலி ஒரு
அன்புச் சின்னம்
என்று உளறுகிறாயே?
இதுதான் உன் புரட்சியா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக