ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

நகைச்சுவை

பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.
பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!
ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.
ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!

***

நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

ஜோ : செக்கோஸ்லேவேகியா சார்.

அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள்.

ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன்.

***

அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

***

நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே!

***

டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது.

ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.
*****


பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?

ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

***

ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே".

உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.

***

சோம்பேறித்தனம் தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி - நேருஜி

நம்முடைய எதிரியையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் - காந்திஜி

ஜோன்ஸ் : அப்படின்னா சோம்பேறித்தனத்தை நேசிக்கணுமா?

*******
ஜோ : நான் செத்துட்டேன்னா எனக்குப் பிறகு நீ விக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
மனைவி : அவர் உங்க பரம எதிரியாச்சே!!!
ஜோ : பின்ன..நான் எப்படித்தான் அவனப் பழிவாங்கறது.

****

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...