இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.
பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
****
மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?
****
ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.
ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.
****
நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!
****
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.
****
ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?
மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.
ஆசிரியர் : எப்படிச் சொல்ற?
மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்
|*****
இரண்டு மாணவர்கள் தீவிர விவாதத்தில் இருந்தனர். அவர்களை நெருங்கிய ஆசிரியர் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, அவர்கள் கீழே கிடந்தது என நூறு ரூபாயைக் காட்டிவிட்டு, 'யார் மிகப்பெரும் பொய்யைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு இந்த நூறு ரூபாயைக் கொடுப்பதாக இருக்கிறோம்' எனக் கூறினர். கோபமடைந்த ஆசிரியர், இந்த வயதிலேயே பொய்யா... நான் உங்கள் வயதில் இருக்கும்போது பொய் என்றால் என்னவென்றே தெரியாது. அது தெரியுமா உங்களூக்கு?
மாணவர்கள் இருவரும் ஆசிரியரிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு அமைதியாகச் சென்றனர்.
****
0 கருத்துகள்:
கருத்துரையிடுக