வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் கவனிப்பாடாமல் போன படைப்புகள்


ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில திரைப்படங்களின் வர்த்தகத் தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே அடுக்குகிறேன்). அதில் "வெள்ளைப் பூக்கள்" பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் கைது செய் படத்தில் வரும் "என்னுயிர் தோழியே" பாடல். இதனை சின்மயி மிக அருமையாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் போது வரும் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மற்றுமொரு பாடல். தீக்குருவி என வரும் பாடல். அதை ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே மிக அருமை. ஏனோ, கவனிக்கப்படாமல் போய்விட்டன. மேலும், பாடல்களை எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான் பணியாற்றமாட்டார் என்றும் நினைக்கின்றேன்.

2. இருவர் படத்தில் வரும். பூக்கொடியின் புன்னகை பாடல். அதனை சந்தியா பாடியிருந்தார் . அதில் பல்லவி முடிந்ததும் வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்றே படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ளே" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமானே பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ தேஷ் அல்லது தமிழில், உந்தன் தேசத்தின் குரல் மிக மிக அருமையானப் பாடல். அவரே பாடியது.

6. "சித்திரை நிலவு சேலையில் வந்தது" - வண்டிச்சோலைச் சின்னராசு படத்தில் வரும். ஜெயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "நெஞ்சே நெஞ்சே" பாடல். "போகும் வழியெங்கும் காற்றே". இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" - இது கார்த்திக், சித்ரா(இன்னொரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது" பாடலும் நல்ல பாடல்.

10. லவ் பேர்ட்ஸ்-ல் வரும் "நாளை உலகம் இல்லை என்றால்". மிக அருமையானப் பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊனே ஊனே உருக்குறானே" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்தது.

12. "அழகே சுகமா" பாடல் - பார்த்தாலே பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும் பாடியது. (தகவலுக்கு நன்றி - ஜெயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்பே" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...