திங்கள், 6 டிசம்பர், 2010

புது வசதிகளுடன் மாற்றங்களுடன் பேஸ்புக் _




54Share
  சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் 
பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், 
வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.









நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே
 மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை
 உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,

A ) இம்முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.http://www.facebook.com/about/profile/

B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று 
குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.

c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.

தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.

1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் 
நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்?
 தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.



அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் 
இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை
 காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.

2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற 
பகுதிகளுக்குச் செல்லும் வசதி.



3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக
 மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் 
இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், 
திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.



4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் 
ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.



5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான்
 நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப
 பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து
 பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள்,
 சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில்
 இதனைப் பிரித்துக் கொள்ள முடியும்.


1 கருத்துகள்:

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றிகள்

Related Posts Plugin for WordPress, Blogger...