சுருக்க குறியீடுகளை அறிய...
எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்
தள முகவரி : http://www.acronymfinder.com/
விண்டோஸ் நுட்பங்கள் அறிய...
பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/
பீட்டா பதிப்புகளை அறிய...
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/
இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...
HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/
தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி
ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/
தொழில்நுட்ப உதவிகளுக்கு...
கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/
இலவச மென்பொருட்கள்...
தினமும் ஒவ்வொரு பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக (சட்டரீதியாக) வழங்கப்படுகிறது. மறுநாள் அம் மென்பொருளை நீங்கள் பணம் செலுத்தி தான் பெற முடியும்
தள முகவரி : http://www.giveawayoftheday.com/
யாருடைய இணையத்தளம்...
நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல்இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்)
தள முகவரி : http://www.allwhois.com/
DHTML Source code...
இணையத்தளம் வடிவமைப்போருக்கு மிகவும் பயனள்ள தளம் DHTML Source code போன்றவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்
தள முகவரி : http://www.getelementbyid.com/
உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book போன்றவற்றை...
உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book, Email Forms, Message Forum,போன்றவற்றை இலகுவாக உருவாக்கி உங்கள் வலைப்பூவில் இணைப்பதற்கு
தள முகவரி : http://www.bravenet.com/
Online இல் Icon களை வடிவாமைப்பதட்கு...
Online இல் உங்களுக்கு தேவையான Icon களை வடிவாமைப்பதற்கு உதவும் தளம் இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான படத்தை Upload பண்ணி அப்படத்தையும் Icon ஆக மாற்றலாம்
தள முகவரி : http://www.rw-designer.com/online_icon_maker.php
0 கருத்துகள்:
கருத்துரையிடுக