கோப்பு வடிவங்களை மாற்ற
Free File Conversion tool for you
ஒரு கோப்பு வடிவில் (file type) இருந்து வேறொரு கோப்பு வடிவிற்கு மாற்றுவதற்கு நிறைய இணைய தளங்களின் சேவைகள் இலவசமாக (free service) வழங்கப்படுகின்றன.
ஆனால் அவற்றின் மூலம் சில குறிப்பிட்ட வடிவ கோப்புகளை மட்டுமே, மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். கணினி என்னும் சமுத்திரத்தில் எண்ணற்ற கோப்புகள் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். இதற்காக எந்த மென்பொருளையும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யாமல் கோப்பு வடிவங்களை மாற்றுவதற்காக உள்ள இணையதளம் http://www.convertfiles.com/
100+ கோப்புகளை இந்ததளம் ஆதரிக்கிறது. நம் கணினியில் உள்ள கோப்பு (அ) இணையத்தில் ஏற்கனவே எங்கோ உள்ள கோப்பு ஒன்றின் யுஆரெல் (URL), நமது மின்னஞ்சல் முகவரி, மேலும் எந்த வடிவிற்கு மாற்றப் போகிறோம் என்பதை உள்ளீடு செய்தல் வேண்டும்.
வடிவு மாற்றப்பட்ட பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சலைத் திறந்து அங்கே உள்ள லின்க்கைச் (link) சொடுக்கினால் போதும். மூன்று நாட்கள் வரை அந்த சுட்டிக்கு உத்திரவாதம் (validity) உண்டு. அதற்குள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் (download) செய்துவிடவேண்டும்.
http://www.convertfiles.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக