ஞாயிறு, 31 மே, 2009

facebook & ஈஸ்டர் egg

கணணி மென்பொருள் வல்லுனர்கள் சின்னக் குறும்புத்தனம் மிக்கவர்கள் என்று முன்னர் கேள்விப்பட்டு இருக்கின்றேன். தாங்கள் வடிவமைக்கும் மென்பொருளில் சின்னச் சின்னக் குறும்புகளினைச் செய்து அது தெரியாமல் மறைத்து ஒரு மறைபொருளாக உருவாக்கிவிடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறான மறைக்கப்பட்ட சில செய்திகள் பின்நாட்களில் வெளிக் கொணரப்படும் போது அவை அம் மென்பொருளினைப் பாவிப்பவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுவது உண்டு. அத்ததைய மறைக்கப்பட்ட செய்திகள் Easter Egg எனக் குறிப்பிடுவதுண்டு.

முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமூக வலையமைப்பு. அத்தகைய மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ள கணணி மென்பொருள் கலைஞர்கள் பல Easter Egg களினை முகப்புத்தகத்தில் உருவாக்கியுள்ளார்கள். இங்கே அவற்றில் சிலவற்றைத் - நான் அறிந்தவற்றை - தருகின்றேன். நீங்கள் கொஞ்சம் செய்து பாருங்களேன்.

1. Click on Fackbook background.
Now press the following keys 'UP', 'UP', 'DOWN', 'DOWN', 'LEFT', 'RIGHT', 'LEFT', 'RIGHT', 'B', 'A', 'ENTER'.

இப்போது மீண்டும் Fackbook background இல் click செய்யுங்கள். இப்போது பாருங்களேன்...







2. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அரட்டை(CHAT)யில் ஈடுபடும் போது பின்வரும் சொல்லினை பதிந்து பாருங்கள். : putnam:. [ No space in between ':' and 'p'. I have to put a space character in between ':' and 'p'. ] என்ன முயற்சித்துப் பார்த்தீர்களா...

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...