டாடி
மகளே.. சின்ன வயசுல என்னை நீ வாய் நெறய ‘அப்பா.. அப்பானு கூப்பிடுவ. இப்போ ஏன் ‘டாடி.. டாடின்னு கூப்பிடுறே?அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்
உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.
அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.
இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.
இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.
சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.
உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள்
மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,
'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'
ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.
'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்
'வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'
டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.வயதானவர்:எனக்கு முதுகு வலி'
டாக்டர்:'வயசாயிடுச்சில்ல''என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.
டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'
ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..7 GB ஹார்ட் டிஸ்க் காலனிபுதுக்கோட்டையில் இருந்து வைரஸ்காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்கவைரஸை வேட்டையாடு விளையாடுசொல்ல மறந்த பாஸ்வேர்டுஒரு மவுஸின் கதை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக